மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்களின் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது இந்தியர்களின் சராசரி வயதிற்க்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயதிற்கும் ஆன வித்தியாசம் பெரியது என பேசினார்.

பின் இந்த வித்தியாசம் களைய பட வேண்டும் என்று பேசிய அவர் மூத்தவர்களை ஒதுக்கிவிட்டு இளைய தலைமுறையினர் இந்த நாட்டின் தலைவரை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் அப்போ உங்களுக்கு என்ன வயசு ஆச்சுன்னு கேப்பிங்க என்ற கமல் நீங்கள் நாட்டை வழிநடத்த பொறுப்பெடுத்துக் கொண்டால் நான் ஓய்வு பெற தயார் என நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.