அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் தயாரிக்கும் சிட்டேடல் தொடரின் இந்திய அடாப்ஷனில் சமந்தா மற்றும் வருண் தவான் நடித்து வருகின்றனர். மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரும் சமந்தா இந்த தொடருக்காக கடுமையாக சண்டை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் கைகளில் காயம் பட்டு ரத்தம் வந்துள்ள விரல்களின் புகைப்படத்தை சமத்தா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். வொர்க் ஆப் ஆக்சன் என்ற வாசகத்துடன் இந்த போஸ்ட் பதிவிடப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் படபிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்து வருகின்றனர். இதற்கு இடையே சிட்டேடல் ஒரிஜினல் வெர்சன் தொடரில் நடிக்கும் பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.