தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகக் கூறி தற்போதைய தவெக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் எதிராக திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மிகக் கடுமையான முறையில் போர்க்கொடி தூக்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
“வாய் திறந்து பேசுங்கள் முதலமைச்சர்” என்று முதலமைச்சர் விஜய்யை நோக்கி நேரடியாகச் சாடியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தோ அல்லது பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடூரமான வன்கொடுமைகள் குறித்தோ முதலமைச்சர் விஜய் எந்தவொரு கருத்தும் பேசாமல் மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கூட்டணி விவகாரம் தொடர்பாகப் பேசிய விசிக மாநிலச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் மீது தவெக அரசு தற்போது பாய்ந்து வழக்குத் தொடுத்துள்ளது போல, கடந்த காலத்தில் உங்கள் மீது மட்டும் யாராவது வழக்குத் தொடுத்து இருந்ததால், தற்போது நீங்கள் அடைந்திருக்கும் இந்த அரசியல் கேரியரின் உச்சமே மொத்தமாகக் கழண்டிருக்கும் என்று அனல் பறக்கும் வார்த்தைகளால் முதலமைச்சர் விஜய்யைத் தாக்கிப் பேசியுள்ளார்.
தவெக அரசுக்கு எதிராகத் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விடுத்துள்ள இந்த “உச்சம் கழண்டிருக்கும்” என்ற பகீர் மிரட்டல் வாசகம் தற்போது எக்ஸ் தளம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் திமுக – தவெக தொண்டர்களிடையே கடுமையான வார்த்தைப் போரை உருவாக்கி, காட்டுத்தீயாய் ட்ரெண்டாகி வருகிறது.
