சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னியின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொன்னையன் கூறியதாவது, ஓ பன்னீர்செல்வம் ஏற்கனவே அழிந்துவிட்டார். திமுகவோடு கள்ள உறவு வைத்திருந்தவர்.

சட்டசபையில் ஒரு முறை பேசும்போது கருணாநிதி போட்டோவை தனது அப்பாவின் புகைப்படத்துடன் வைத்து சாமி கும்பிட்டு விட்டு தான் மற்ற வேலைகளை செய்வோம் என அவர் கூறினார். அன்றே அவர் கள்ள உறவில் இருந்தது தெரிந்துவிட்டது.

அந்த கள்ள உறவை இன்று உறுதிப்படுத்தி இருக்கிறார். எங்களுக்கு இது லாபம். அவருக்கு அழிவு. ஓ.பன்னீர்செல்வம் தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டார். கள்ள உறவுக்காரர் என்ற பட்டத்தையும் கட்டிக் கொண்டார் என கூறியுள்ளார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி தான் பிரதமர் மோடி தன்னை சந்திக்கவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பொன்னையன் அது உண்மை இல்லை. செல்லாக் காசாக கடலில் மூழ்கி விட்ட ஒரு துரோகி என்ற பட்டத்தை பெற்றவர். அவரைப் பற்றி என் பேசுகிறீர்கள் என கூறியுள்ளார்.