திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரோடு மருதப்பன் நகர் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாதனா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீரப்பன் மது போதைக்கு அடிமையாகி உள்ளார். அவர் தினமும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற வீடு திரும்பிய சாதனா மது போதையில் தனது தந்தை தகராறு செய்ததை பார்த்துள்ளார்.

தனது தந்தையிடம் சென்று குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கேட்டுள்ளார். அப்போது வீரப்பன் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் மன உளைச்சலில் சாதனா அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை தேடி பார்த்தனர். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியதால் அவரது உடலை கண்டுபிடிக்க இயலவில்லை. அதன் பிறகு மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டு சிறுமியின் உடலை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.