பீகாரை பூர்வீகமாகக் கொண்ட பெற்றோருக்கு மகனாகப் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவர் பொதுத்தேர்வில் அசாத்திய சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்ற இந்த மாணவன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மொத்தமாக 490 மதிப்பெண்கள் பெற்று, தனது பள்ளியிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

​தாய், தந்தைக்கு தமிழ் மொழி துளிக்கூட தெரியாத சூழ்நிலையிலும், இந்த மாணவர் தமிழ் பாடத்தில் மட்டும் தனியாக 94 மதிப்பெண்கள் எடுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.