
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற நிலையில் ஆளுநர் வேண்டுமென்றே விதிமீறல் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன். சட்டமன்றத்தின் மாண்பையும், மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்காமல் தமிழ் தாய் வாழ்த்து அவமானப்படுத்த துணிந்ததன் மூலம் அவர் வகிக்கும் பதிவுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் நடந்து கொள்வது இதுவரை இந்த பேரவை காணாத ஒரு நிகழ்வு. விடியல் எங்கே என்று கேட்கும் நிலையில் விடியல் என்று சொன்னது தமிழக மக்களுக்காக தான் தவிர மக்களுக்கு எதிரானவர்களுக்கு கிடையாது.
அவர்களுக்கு விடியலை பார்த்தால் கண்கள் கூச தான் செய்யும் என்று எதிர்கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். அதன் பிறகு புதுமைப்பெண் திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் போன்றவைகள் குறித்து பேசும்போது முதல்வர் ஸ்டாலின் தமிழக மாணவிகள் என்னை அப்பா அப்பா என்று அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறி கண் கலங்கினார். மேலும் பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ஒன்றிய அரசு இதுவரை எந்தவித நிதியையும் விடுவிக்கவில்லை எனவும், மிகவும் சொற்பமான அளவில் தான் நிதியை தந்துள்ளது எனவும் கூறினார்.