பிலிப்பைன்ஸில் உள்ள செபு நகரத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை ராய்ராய், தனது தந்தையை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், ஒரு ஜன்னல் அருகில் தனது தந்தை நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்ததும், அந்த இடம் ஆபத்தானது என உணர்ந்த சிறுமி உடனடியாக ஓடி சென்று அவரை ஜன்னலிலிருந்து விலக்க முயற்சிக்கிறாள். இந்த வீடியோ, குழந்தையின் அப்பாவித்தனமும், தந்தையின் மீதான அன்பும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நெகிழ்ச்சியான வீடியோவை, ராய்ராயின் தாயார் ஜிப்போரா ஃபேய் ககம்பாங் தனது Facebook பக்கத்தில் (@zipporahfaye) பகிர்ந்துள்ளார். தந்தையின் பாதுகாப்புக்காக அஞ்சாமல் ஓடும் அந்தக் குழந்தையின் செயல்கள் பலரை நெகிழ வைத்துள்ளன.
தன் மகளுக்கு இளம் வயதிலேயே பாதுகாப்பு குறித்து பலமுறை கூறியதாகவும், அதனை உணர்ந்து செயல்பட்டதாகவும் ஜிப்போரா தெரிவித்துள்ளார். பல நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பாராட்டி தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
“இவள் தந்தையின் உயிர் கேடயம் போல!” என ஒருவர் எழுதியுள்ளார். மற்றொருவர், “இளவரசி என் இதயத்தை தொட்டாள்” என்று நெகிழ்ச்சி தெரிவித்தார். இந்த வீடியோ, பெற்றோர் குழந்தைகளுக்கு எப்படி நேர்மறையான வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
