நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனராக மீண்டும் இயக்கிய திரைப்படம் தான் லால் சலாம் . லைக்கா நிறுவனம் தயாரித்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த்  போன்றோர்  நடித்துள்ளார்கள். மேலும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது .சுமார் 40 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில் ரசிகர்கள் ரஜினி படம் என்பது போன்றே கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்கள் ஆரவாரம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார். தற்போது ரஜினி தன்னுடைய X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு அன்பு சலாம் .உங்களுடைய லால் சலாம் திரைப்படம் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளதோடு வீல் சேரில் அமர்ந்துள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.