கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு வந்துவிடுமோ, பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டுவிடுமோ என ஒட்டுமொத்த இந்தியாவும் கலக்கத்தில் இருந்த நிலையில், இப்போது ‘அப்பாடி’ என நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் ஒரு செய்தி கிடைத்துள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளுடன் புறப்பட்ட பிரம்மாண்ட கப்பல் ஒருவழியா பாதுகாப்பாக இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டது. இந்த கப்பலின் வருகையினால் இனி நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடே இருக்காது என்கிற சூழல் உருவாகியுள்ளது, இது சாமானிய மக்கள் முதல் வாகன ஓட்டிகள் வரை அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.

​இது ஒருபுறமிருக்க, சர்வதேச அளவில் பெரும் தலைவலியாக இருந்த ஹோர்முஸ் நீரிணை சிக்கலும் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்தியக் கப்பல்களை இனி எந்தத் தடையுமின்றி அனுமதிப்பதாக ஈரான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் இனி வளைகுடாவிலிருந்து இந்தியா வரும் கப்பல்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த இந்த மாபெரும் வெற்றியால், இனி எரிபொருள் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிகிறது.