மாநிலம் முழுவதும் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இத்துடன் திருநர்களுக்கும் இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர், ‘மகளிர் வெற்றிப்பயணத் திட்டம்’ என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்படும் இத்திட்டம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் மகளிர் மட்டுமின்றி திருநர்களும் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், எல்.எஸ்.எஸ் (LSS), டீலக்ஸ் பேருந்துகளிலும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே இயங்கும் சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் இந்த இலவசப் பயணச் சலுகை இனி பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இத்திட்டம் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
