
தமிழ்நாட்டில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தகுதி உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் நிலையில் புதிதாக ரேஷன் வாங்கியவர்கள் மற்றும் சில புதிய பயனாளிகளுக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
சில மாநிலங்களில் 1500 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரையில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில் தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கப்பட உள்ளது. அதன் பிறகு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.