தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில் ஆத்திரத்தில் சில வார்த்தைகளைப் பயன்படுத்திய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தற்போது அதற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இத்தனை ஆண்டுகால ஊடக அனுபவம் இருந்தும் ‘தறுதலை’, ‘தற்குறி’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது தனக்கே மிகப்பெரிய உறுத்தலைத் தருவதாகவும், பலருடைய நேரத்தையும் உணர்வுகளையும் இது புண்படுத்தியிருப்பதாகக் கூறி வேதனைப்பட்டுள்ளார்.
ஒரு விபரீத சூழலில் கோபத்தில் பிழையான சொற்களைக் கையாண்டது தவறுதான் எனத் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ள அவர், இந்தச் செயல் தனக்கு அளவுகடந்த மன உளைச்சலைக் கொடுத்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த நேர்மையான மன்னிப்பு மற்றும் வருத்தம் இணையவாசிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
