ஹரியானா சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கியதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ஆண்டு வருமானம் 1.80 லட்சம் கொண்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இறப்பு ஏற்பட்டால் அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மாநிலத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும். பிரதமர் ஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிகளும் புதிதாக இரண்டு பள்ளிகள் திறக்கப்படும்.

இதனைப் போலவே அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 4500 இல் இருந்து 5 ஆயிரத்து 300 ஆக அதிகரிக்கப்படும். அது மட்டுமல்லாமல் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு பணியிடங்களில் 65 ஆயிரம் வேலைகள் வரை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை மாநிலத்தில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது