
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேப்டன் விஜயகாந்த் பற்றி ஒரு பொது மேடையில் மிகவும் மோசமாக விமர்சனம் செய்த நிலையில் கடந்த வருடம் விஜயகாந்த் நினைவு தினத்தின் போது அவரை மிகவும் புகழ்ந்து பேசினார். அவர் மோசமாக விமர்சித்தது மற்றும் பின்னர் மரியாதையாக பேசியது ஆகிய வீடியோக்களை ஒன்று சேர்த்து கூகுளில் பச்சோந்தி என்றால் என்ன என்று அடித்தால் அது சீமான் பேசிய இந்த வீடியோ தான் என்கிற விதத்தில் அதனை இணையதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள். அதாவது விஜயகாந்த் பற்றி அவர் மோசமாக பேசும் போது, லூசு பயலுக அந்த கூட்டணியில் இருக்கும் நல்ல கண்ணு கால் தூசிக்கு பெறுவாரா விஜயகாந்த்.
காதில் ஒரு கம்மலை கூட நுழைத்ததில்லை. ஒரு கபடி அணிக்கு கேப்டனாக இருந்ததில்லை. இவர் தமிழ் உலகத்திற்கு கேப்டன் ஆகிவிட்டார். விஜயகாந்த் மட்டும் முதலமைச்சர் ஆனால் மொத்த தமிழனும் தீக்குளித்து சாக வேண்டியது தான். தமிழருடைய தன்மானத்திற்கு வந்த மிகப் பெரிய சோதனை இது என்று கூறினார். இதைத்தொடர்ந்து கடந்த வருடம் விஜயகாந்த் நினைவு தினத்தின் போது சீமான் பேசியதாவது, அனைவராலும் அன்பாக கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். அவர் ஒரு மதிப்பு மிக்க மனிதன். அவரால் வாழ்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு. அவரால் தாழ்ந்தவர்கள் அழிந்தவர்கள் என்று ஒருவர் கூட இருக்க முடியாது. மேலும் அப்படிப்பட்ட ஒரு மகத்தான மாமனிதன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் என்று கூறினார்.
View this post on Instagram