
தமிழக வெற்றிக்கழகம் என்று அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அவருக்கு முதலில் சீமான் தொடர்ந்து ஆதரவு கொடுத்த நிலையில் யார் அவரை எதிர்த்தாலும் என் தம்பிக்கு நான் ஆதரவு கொடுப்பேன் என்று கூறினார். ஆனால் நடிகர் விஜயின் முதல் மாநாடு முடிவடைந்த பிறகு விஜயை சரமாரியாக சீமான் விமர்சிக்க தொடங்கிவிட்டார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முன்னதாக அரசியலுக்கு வருவேன் என்று கூறிய போது மிகவும் கடுமையான வார்த்தைகளால் சீமான் அவரை விமர்சித்தார். அவருடைய ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் கூட மெண்டல் ரஜினிகாந்த் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். நடிகர் ரஜினிகாந்த் இதைப் பற்றி அவர் கூறும் போது இனி அடிக்கிற அடியில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மட்டும் இல்லை இனி எவனுமே அரசியலுக்கு வரக்கூடாது என்று அப்போது சீமான் பேசியிருந்தார்.
இப்படி ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்த சீமான் சமீபத்தில் அவரை திடீரென போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். இதனை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று நாம் தமிழர் கட்சியினர் கூறிய நிலையில் சீமான் ரஜினிகாந்திடம் அரசியல் மற்றும் திரையுலகம் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக கூறினார். அதாவது நடிகர் விஜயின் அரசியல் வருகை சீமானுக்கு பின்னடைவாக கூறப்படும் நிலையில் அவருடைய கட்சியிலிருந்து ஏற்கனவே பல நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சிக்கு தற்போது இளைஞர்கள் வாக்குகள் அதிகமாக இருக்கும் நிலையில் அந்த வாக்குகள் விஜய் கட்சிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.
மேலும் இதன் காரணமாக ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் எதிரிகளாக இருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் நோக்கத்தில் சீமான் ரஜினியை நேரில் சென்று பார்த்ததாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்தை சீமான் நேரில் சென்று சந்தித்த நிலையில் முன்பு அவரை மோசமாக விமர்சித்துவிட்டு தற்போது மட்டும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்வது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். குறிப்பாக ரஜினிகாந்தை சீமான் நேரில் சென்று சந்தித்ததை நடிகை விஜயலட்சுமி கூட விமர்சித்து வீடியோ போட்டிருந்தார். தமிழக அரசியல் வட்டாரத்தில் ரஜினி மற்றும் சீமானின் திடீர் சந்திப்போம் மிகவும் பரபரப்பான ஒரு விஷயமாக பேசப்பட்டு வருகிறது.