பாகிஸ்தான் நாட்டின் மக்கள் தொகை தோராயமாக 24 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நாட்டில் ஏராளமான மக்கள் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் நகரவாசிகள் கூட 14 சதவீதம் பேர் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதன்படி மொத்தமாக 74 சதவீத பேர் அவர்களின் வருமானம் மூலம் மாத செலவை சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். கடந்த வருடம் மே மாதம் 60 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 74 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவர்கள் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியமான செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில் 40% பேர் செலவுகளுக்காக கடன் வாங்குவது தெரியவந்துள்ளது. மேலும் இதில் 10 சதவீத பேர் வருமானத்தை ஈடு செய்வதற்காக பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.