கேரளா சகோதரர்களின் அன்புக்கு நன்றி என்று மலையாளத்தில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் வரலாறு காணாத மழையை சந்தித்தது. இதனால் அணைகள் நிரம்பி கண்மாய்கள், குளங்கள் உடைந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தது. மேலும் இந்த கோர வெள்ளத்தின் பிடியில் பல்வேறு மக்களும் தங்களின் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இதனிடையே  பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பிலும், பல்வேறு தன்னார்வலர்களும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்களை அந்ததந்த மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளா சகோதரர்களின் அன்புக்கு நன்றி என்று மலையாளத்தில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவு செய்துள்ளார். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும் வீடியோவை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்..