திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்தவர் செல்வ பிருந்தா இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்வப் பிருந்தா தாய்ப்பால் தானம் செய்து வந்தார். இவ்வாறாக இரண்டு ஆண்டுகளில் 300 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து சாதனை படைத்துள்ளார்.
நூற்றுக்கு மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் இன்றி தவிப்பதை அறிந்த செல்வ பிருந்தா தனியார் அமைப்புடன் இணைந்து தாய்பாலை தானம் செய்துள்ளார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
