இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆறறிவு கொண்ட மனிதர்கள் தான் ஜாதி மதம் என எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் தங்களை தாங்களே பிரித்து வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் ஐந்தறிவு கொண்ட ஜீவன்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. அதாவது மிருகங்கள் வேறு இனத்தை சேர்ந்த விலங்குகள் பறவைகளுக்கு உதவுவதையும் நட்புடன் பழகுவதையும் தற்போது இணையத்தில் வீடியோவாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி நட்புக் கொள்வதற்கு அன்பு மட்டும் போதும் வேறு எந்த பேதமும் தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில் டால்பின்களுடன் பந்து விளையாடும் நாய் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.