
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஜூலை 20ஆம் தேதி விடுமுறை வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக நியாய விலை கடையை ஊழியர்கள் வேலை பார்த்தனர்.
அதற்கு ஈடு செய்யும் விதமாக ஜூலை 20-ம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 நாள் பணிக்காலத்தை ஈடு செய்யும் விதமாக ஏற்கனவே ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில் இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.