சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் சில்லறை விற்பனையில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் பெய்த கனமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது 100 ரூபாய் கடந்து தக்காளி விற்பனை செய்யப்பட்டு 130 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தக்காளியை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்ய அமைச்சர் பெரிய கருப்பன் அவசர ஆலோசனை செய்ய உள்ளார். தற்போது பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அதே விலையிலேயே ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.