தமிழகத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஜூன் 30-ம் தேதியுடன் பணிக்காலம் முடிந்து சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டு தொடங்கி சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் மாணவர்களின் கல்வி பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை கருதி பள்ளி கல்வித்துறை ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற்ற ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி பணி நியமனம் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நடப்பு கல்வி ஆண்டு முடியும் வரை தொடர்ந்து கற்பித்தல் பணியை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கற்றல் கற்பித்தல் பணி எவ்வித இடையூறும் இல்லாமல் தொடரும். பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.