தமிழகத்தில் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைச்சர் பொன்முடி என்று ஆலோசனை நடத்தினார். நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை கல்லூரியில் கொண்டாடுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை குறித்து தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் நேற்று ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.