
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெரியார் பற்றி இழிவாக பேசி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் சீமானுக்கு எதிராக எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்படியான நிலையில் சீமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரதமர் மோடி குறித்து பேசி உள்ளார். அதில், ராகுல் காந்தியுடன் ஒப்பிடும்போது பிரதமர் மோடி கடுமையான உழைப்பாளி. ராகுல் காந்தி பகுதி நேரம் அரசியல் செய்பவர் என்றால் மோடி முழு நேரமும் அரசியல் செய்பவர்.
இந்த வயசுல அவர மாதிரி சுற்றுப்பயணம் யாராலயுமே செய்ய முடியாது. தனிமனிதனாக தன்னுடைய கருத்தை தெளிவாக சொல்லக்கூடியவர். அவருடைய வயசுக்கு அவர் இவ்வாறு அரசியலில் பயணிப்பது மிகவும் அபூர்வம் தான். ராகுல் காந்தி சில நேரங்களில் இருப்பார் சில நேரங்களில் காணாமல் போய்விடுவார். அதனால் ராகுலை விட மோடி சிறந்த அரசியல்வாதி என்பது பாராட்டுக்குரியது என சீமான் புகழ்ந்து பேசி உள்ளார்.