சமூக வலைதளங்கள் என்றாலே பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டுமே என்ற நிலையை மாற்றி, மனிதநேயத்தை உரக்கச் சொல்லும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையவாசிகளை நெகிழச் செய்துள்ளது.
ஒரு தெருவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், ஒரு சிறுமியின் வீட்டு வாசலில் ஈரமான சிமெண்ட் பூசப்பட்டுள்ளது. வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த அந்தச் சிறுமி, சிமெண்ட் மீது நடந்தால் தரை சேதமடைந்து விடுமே என்று தயங்கி நின்றதைக் கண்ட அங்கிருந்த கட்டுமானத் தொழிலாளி, ஒரு நொடி கூட யோசிக்காமல் மனிதாபிமானத்துடன் உதவ முன்வந்தார்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தச் சிறுமியைத் தனது முதுகில் சுமந்து கொண்டு, ஈரமான சிமெண்ட் தரை சேதமடையாத வண்ணம் பாதுகாப்பாக சாலையின் மறுபுறம் கொண்டு சென்று விட்டார்.
In the world of men , he is the gentleman 🫡 pic.twitter.com/CbHgjqzE3I
— Vishal (@VishalMalvi_) April 14, 2026
“>
எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் அந்தத் தொழிலாளி செய்த இந்தத் தன்னலமற்ற உதவி, “மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை” என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
