சமூக ஊடகங்களில் பெண்களின் திறமைகளை விட அவர்களது தோற்றத்திற்கும், அழகுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விமர்சிக்கும் நச்சு கலாச்சாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ‘பூனம் வ்லாக்ஸ்’ என்ற யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நடத்தி வரும் இளம் பெண் வ்லாகர் ஒருவர், அண்மையில் சமூக வலைதளங்களில் கடுமையான உருவக் கேலிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
அகமதாபாத்தின் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து நகைச்சுவையான பாணியில் அவர் வெளியிட்ட வீடியோக்களைக் குறிப்பிட்ட சிலர், அவரது உள்ளடக்கம் குறித்துப் பேசாமல், அவரது சிறிய ஹேர்கட், ஆடை வடிவமைப்பு மற்றும் உடல் தோற்றத்தை விசித்திரமான கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு எக்ஸ் (X) தளத்தில் கடுமையாகக் கிண்டல் செய்து பதிவிட்டனர்.
People making fun of her in comments, but she took everything positively
She even said look at my content not my body, no victim card, no abusing, just making content with smile, she handled all the trolls with smile and grace
Look at her confidence
Rare W https://t.co/7Sjbcz6r6H pic.twitter.com/TAdOf0cgYG
— Kantala fc (@ifOnlyKantala) May 29, 2026
இத்தகைய தரம் தாழ்ந்த ட்ரோல்களுக்கு மத்தியில், அந்தப் பெண் வ்லாகர் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் தொடர்ந்து தனது பாணியில் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாகப் பெருமளவிலான இணையவாசிகள் தற்போது குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அவரது தோற்றத்தை விமர்சிப்பதை விடுத்து, அவர் சாலைப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் நேர்மறையான அணுகுமுறையையும், அவரது அசாத்தியமான தன்னம்பிக்கையையும், தனித்துவமான பேச்சுத் திறமையையும் பாராட்ட வேண்டும்” என்று ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம், சமூக ஊடகங்களில் பெண்களின் திறமைகளை விட அவர்களது தோற்றத்தை மட்டுமே வைத்து மதிப்பிடும் போலி அழகு அளவுகோல்கள் குறித்த புதிய விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
