சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்விக்கு கொஞ்சம் கூட பயமே கிடையாது என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி ஆடிய முதல் பந்திலேயே ரிஸ்வி சிக்ஸ் அடித்தது குறித்து பேசிய அவர், “மிகச்சிறந்த பவுலரான ரஷீத் கானின் பந்தை அடித்து ஆட வேண்டுமென நினைப்பதே வினோதமானது தான். இதனை செய்ததன் காரணமாகவே அவரது ஆட்டம் மீதான சுவாரஸ்யம் அதிகரித்தது” என்றார்