ஐபிஎல் வரலாற்று இதையே முதல் 10 ஓவர்களுக்கு அதிக ரன்கள் (148 ரன்கள்) குவித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது சன்ரைசஸ் ஹைதராபாத் அணி. ஐபிஎல் தொடங்கி தற்போது 17வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த 17 ஆண்டுகளிலும் இப்படி ஒரு சாதனையை இதுவரை எந்த அணியும் செய்ததில்லை.

இறுதியாக 2021 ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் இதே சன்ரைசர்ஸ் அணிக்கே எதிராக மும்பை அணி மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்து 10 ஓவர் முடிவில் 131 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் இருபது ஓவர் முடிவில் ஹைதராபாத் அணியும் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து அபார சாதனை படைத்துள்ளது.