சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இலங்கைக்குச் சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட எளிய கேள்விக்கு அவர் அளித்த பதில் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. அந்தப் பெண் “உங்களுக்குப் பிடித்த விலங்கு எது?” என்று கேட்டபோது, அந்த ஓட்டுநர் சற்றும் யோசிக்காமல் “சிக்கன்” என்று பதிலளித்தார்.
மேலும் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், “கோழி ஒரு விலங்கா? அல்லது சாப்பிடுவதற்காகப் பிடிக்குமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்க, ஓட்டுநர் தனது தவறை உணர்ந்து உடனடியாகச் சமாளித்தார். தனது தவறை சரிசெய்த அந்த ஓட்டுநர், தனக்கு நாய் தான் பிடிக்கும் என்றும், தன்னிடம் நாய் இருப்பதாகவும் கூறினார்.
View this post on Instagram
“>
இதனால் உடனே அந்தப் பெண் குறும்புத்தனமாக, “ஆனால் நீங்கள் நாயைச் சாப்பிடமாட்டீர்கள் தானே?” என்று கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே “இல்லை” என்று பதிலளித்தார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வேடிக்கையான வீடியோ 2.3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “சிக்கன் எப்போது விலங்குப் பட்டியலில் சேர்ந்தது? அது உணவுப் பட்டியலில் அல்லவா இருக்கிறது” எனப் பயனர்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
