அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தற்போதைய நடவடிக்கைகள் சீர்குலைக்கக்கூடும் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளன.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்துமாறு நெதன்யாகுவிற்கு உள்நாட்டில் கடுமையான அரசியல் அழுத்தம் நிலவி வருகிறது. அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள 14 அம்ச ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையாக லெபனான் போர் நிறுத்தம் இருந்தாலும், அதற்கு மாறாக இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு உச்சமடைந்துள்ளதுடன், சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த இராஜதந்திர முயற்சிக்கு இஸ்ரேல் முட்டுக்கட்டை போடுவது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
