
பிரபல நடிகரான அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித் குமார் அக்டோபர் மாதம் தான் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பை தொடங்க உள்ளார். அதுவரை அஜித் வேறு எந்த படத்திலும் கமிட் ஆக மாட்டார் என்ற தகவல் பரவுகிறது. இந்த நிலையில் துபாயில் இருக்கும் ரெஸ்டாரண்டில் ரசிகர் ஒருவர் நடிகர் அஜித் குமாரை பார்த்துள்ளார்.
அவர் அஜித்திடம் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் பாடலை பாடி காண்பித்தார். அதனை ரசித்து கேட்ட அஜித் ரசிகரை ஆரத்தழுவி வாழ்த்து கூறினார். பின்னர் உங்கள் பெயர் என்ன என கேட்டபோது ரசிகர் தனது பெயர் அஜித் என கூறினார். இதனை கேட்டு வியந்த நடிகர் அஜித் புன்சிரிப்புடன் அங்கிருந்து விடை பெற்றார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
Latest Video Of THALA #AjithKumar From Dubai!
A Lucky Fan Pays Tribute To AK By Singing A Song From Kandukondain Kandukondain
What A Moment To Cherish!
#VidaaMuyarchi | #GoodBadUgly pic.twitter.com/b4sS5U4mva
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) January 25, 2025