
தெலுங்கு திரையுலைகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ராணா. இவர் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.இதன்முலம் பிரபலம் ஆனார். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் மூன்று படங்கள் வெளியானது. நடிகர் ராணாவின் தந்தை சுரேஷ் பாபு ஒரு பிரபல தயாரிப்பாளர். அவர் தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் ராணா மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு இருவரும் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக தொழிலதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் ஹோட்டல் வைக்கப் போவதாக கூறி ராணா மற்றும் அவரது தந்தை தொழிலதிபரிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளனர். குத்தகை காலம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில் அந்த இடத்தை ராணாவின் தந்தை சுரேஷ் பாபு ₹ 18 கோடிக்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளார். அந்த இடத்தை கேட்டால் பிரச்சனை செய்வதாகவும், மிரட்டுவதாகவும் புகாரில் தொழில்அதிபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ராணாவின் மீதும் அவரது தந்தையின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.