ஐபிஎல் 2026 ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் ₹1.60 கோடிக்கு வாங்கப்பட்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா, தற்போது தனது சொந்த ஊரில் செருப்பு அணிந்துகொண்டு டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் இவருக்கு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்க மறுத்ததே இதற்குப் பின்னணியில் உள்ள முக்கிய காரணமாகும். வாரியத்தின் விதிமுறைப்படி ஒரு வெளிநாட்டு லீக்கில் விளையாடச் செல்லும் முன் உடற்தகுதித் தேர்வில் (Fitness Test) தேர்ச்சி பெற வேண்டும்;

ஆனால் துஷாரா அந்தத் தேர்வில் தோல்வியடைந்ததால் ஐபிஎல்-லில் விளையாட முடியாமல் போனது. இதனால் ஆத்திரமடைந்து தனது சொந்த வாரியத்தின் மீதே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த துஷாரா, தற்போது தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியதுடன் அந்த வழக்கையும் வாபஸ் பெற்றுள்ளார்.

மலிங்கா பாணியில் பந்துவீசும் திறமை கொண்ட இவருக்கு, ஒரு சிறிய கவனக்குறைவு கோடிக்கணக்கான வாய்ப்பை இழக்கச் செய்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.