தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சித்ரா. சின்னக்குயில் சித்ரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சித்ராவின் குரல் அவ்வளவு இனிமையானது. இவர் அண்மையில் வெளியான வாரிசு படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடலை பாடியிருந்தார்.

இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் பாடகி சித்ரா கலந்து கொண்டுள்ளார். அப்போது ஒருவர் பாடகி சித்ராவை வைத்து மேஜிக் ஷோ செய்கிறார். அந்த மேஜிக் ஷோவில் பாடகி சித்ரா அந்தரத்தில் தொங்கியபடியே பாட்டு பாடுகிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.