பிரபல பின்னணிப் பாடகி சின்மயி, இசைத்துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து மீண்டும் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு பிரபல பாடகர் இளம்பெண்களுக்குத் தனது அந்தரங்கப் படங்களை அனுப்பி, அவர்களைப் படுக்கைக்கு அழைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்த உண்மையை வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ள சின்மயி, அந்தப் பாடகரின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் ஒரு “பெரிய மனிதர்” என்ற போர்வையில் சுற்றி வருவதாகச் சாடியுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ‘மீ டூ’ யக்கத்தின் மூலம் வைரமுத்து உள்ளிட்ட பல முக்கியப் புள்ளிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த சின்மயி, தற்போது மீண்டும் ஒரு முக்கிய நபரைக் குறித்துப் பேசியிருப்பது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் அவர் திரைத்துறையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையும், இத்தகைய நபர்கள் தொடர்ந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இளம் கலைஞர்களைச் சுரண்டுவதையும் சின்மயி கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
