உலகில் கலைக்கு அநேக வடிவங்கள் உள்ளன; கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெவ்வேறு வழிகளில் மக்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்கள். சிலர் பெரிய மேடைகளில் தங்களின் கலையை வெளிப்படுத்த, பல தெருவோரக் கலைஞர்களோ தங்களின் அசாத்திய திறமையால் சாதாரண மக்களையும் மகிழ்விக்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு தெருவோரக் கூத்து வீடியோ பார்ப்பவர்களைப் பெருவியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மரப்பாவை கையில் பேனாவைப் பிடித்துக் கொண்டு காகிதத்தில் ஏதோ வரைய முயற்சிக்கிறது.

அது பேனாவை எடுப்பது, அதன் மை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது, பின்னர் வரையத் தொடங்குவது என அதன் ஒவ்வொரு அசைவும் மிகத் துல்லியமாக நிஜ மனிதனைப் போலவே உள்ளது.

அந்த மரப்பாவையின் அசைவுகளைப் பின்னணியில் இருந்து இயக்கும் கலைஞர், அதனை எவ்வளவு நுணுக்கமாகவும் தத்ரூபமாகவும் கையாளுகிறார் என்பதுதான் இந்த வீடியோவின் சிறப்பம்சமாகும்.

பார்ப்பதற்கு அந்தப் பொம்மைக்கு நிஜமாகவே உயிர் வந்துவிட்டது போன்ற உணர்வைத் தருவதால், இந்த வீடியோ இணையத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது. இந்த விசித்திரக் கலையை நிகழ்த்துபவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல மரப்பாவை கலைஞர் ‘ரஃபேல் குரோமி’ ஆவார்.

 

View this post on Instagram

 

A post shared by Art Viral 🎨 (@art_viral)

“>

எந்தவொரு பெரிய செட்டிங்ஸ் அல்லது நவீன தொழில்நுட்பமும் இல்லாமல், வெறும் திறமையை மட்டுமே நம்பி மக்களைக் கட்டிப்போடும் இவரின் இந்த அசாத்திய கலையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி, வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.