மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று திமுக எம்பி கனிமொழி உரையாற்றினார். அப்போது, நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்பது தான் உண்மை. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் வரலாறு 3500 ஆண்டுகள் முன் வேத காலத்தில் தொடங்கியதாக நீங்கள் கூறலாம்.

ஆனால் இந்தியாவில் இரும்பு காலம் 5,345 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அதற்கான சான்றுகள் அனைத்தும் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப் பழமையான காலம் என்ற கண்டுபிடிப்பை பற்றி மத்திய அரசு இதுவரை எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. இந்த உண்மையை புறக்கணிக்க நினைத்தால் திராவிட நாகரிகத்தில் இருந்து நீங்கள் விலக்கி வைக்கப்படுவீர்கள் என்று கனிமொழி கூறியுள்ளார்.