தெலுங்கானா மாநிலம் மடுகுலபள்ளி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கோட்டா கல்யாணி .இவருக்கு இரண்டு இளைஞர்கள் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அதாவது சிவா மற்றும் மது என்ற இரண்டு இளைஞர்களும் தங்களில் ஒருவரை காதலிக்கவில்லை என்றால் உன்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி உள்ளனர் .

இதனால் பயந்து போன கோட்டா கல்யாணி  தற்கொலை செய்துள்ளார்.  இந்த நிலையில் காவல்துறையினர் சிவா என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். மது என்ற இளைஞர் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.