
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பாலாஜி நகரில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தியதில் 3 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது உறுதியானது.
இதனால் 22, 24, 27 வயதுடைய 3 பெண்களை மீட்டு போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர். இதனையடுத்து பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய திருப்பூர் மாவட்டம் தேர் பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பாலமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.