
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நாகூர் நோக்கி சென்ற பேருந்தில் ஜன்னலோர இருக்கைகாக பெண்கள் சண்டை போட்டுக் கொண்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நாகூர் நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பேருந்தின் ஒரு இருக்கை ஜன்னல் ஓரம் ஒரு பெண் அமர்ந்திருந்தார்.
மற்றொரு பெண் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண்ணுடன் இருக்கைக்காக சண்டை போடுகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனை அந்த பேருந்தில் பயணித்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.