இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு எருமை மாடு அமைதியாக நடந்து செல்கிறது. அப்போது அங்கு வந்த ஒரு மூதாட்டி, அந்த மாட்டை விரட்டுவதற்காக அதை கோபப்படுத்தி இருக்கிறார். இதனால், அந்த எருமை மாடு திடீரென வேகமாக ஓடி வந்து மூதாட்டியை முட்டி தள்ளியது. இந்த சம்பவம் பார்ப்பவர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, விலங்குகளை தேவையில்லாமல் தூண்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இதனால், மக்கள் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.