
மத்திய பிரதேசத்தில் சொத்துக்காக தாயை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் தனது 64 வயது தாயை அடித்துக் கொன்றதாக மகனும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது சொத்தை தன்னுடைய பெயருக்கு எழுதிக்கொடுக்க தாய் மறுத்ததால், கோபமடைந்த அவருடைய மகன் மற்றும் மகனின் மனைவி இருவரும் சேர்ந்து கிரிக்கெட் பேட் மற்றும் உலோக பைப்பால் மூதாட்டியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கணவன், மனைவி இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.