நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக 2 கிலோ கோதுமை, மூன்று கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தற்போது பிப்ரவரி மாதம் முதல் மக்களுக்கு கூடுதல் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் பிப்ரவரி மாதத்தில் இருந்து அரிசி மற்றும் கோதுமையின் அளவு குறைக்கப்பட்ட இலவசமாக தினை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மூன்று கிலோ அரிசி மற்றும் 2 கிலோ கோதுமைக்கு பதிலாக இரண்டு கிலோ கோதுமை, ஒரு கிலோ அரிசி மற்றும் 2 கிலோ திணை இலவசமாக ஜூன் மாதம் வரை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.