சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் சந்தை மாற்றங்களால் கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (டிசம்பர் 24) அதிரடியாக உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,800-க்கும், ஒரு சவரன் ரூ.240 அதிகரித்து ரூ.1,02,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையைப் பின்பற்றி வெள்ளியின் விலையும் விண்ணைத் முட்டும் வகையில் உயர்ந்துள்ளது;
ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.244-க்கும், விற்பனையாகிறது. இந்தத் தொடர் விலை ஏற்றம் நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
