கடந்த மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இந்த மாதத்தில் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதன்படி கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,550 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4546 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 36 ஆயிரத்து 368 ரூபாயாகவும் விற்பனை ஆகிறது.