சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை இரண்டு முறை குறைந்த நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,12,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விளையும் அதிகரித்து ஒரு கிராம் 15273 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,22,184 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் என்று கிராமுக்கு ஐந்து ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது