தமிழக அரசியலில் தவெக ஆட்சி அமைக்கத் தயாராகி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) சொந்த மாவட்டமான சேலத்திலேயே ஒரு ‘பெரும் ‘ அதிர்ச்சி காத்திருக்கிறது.
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கார்த்திக், தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட பணிச்சுமை காரணமாக விலகுவதாகத் தலைமைக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தாலும், சமீபத்திய தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதே இந்த அதிருப்திக்குக் காரணம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஏற்கனவே இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கட்சித் தலைமை மீது புகைச்சல் நீடித்து வரும் நிலையில், எடப்பாடியின் கோட்டையிலேயே ஒரு நிர்வாகி கழன்று கொண்டது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராஜினாமா படலம் இன்னும் பல மாவட்டங்களுக்குப் பரவுமோ என்கிற அச்சத்தில் அதிமுக தலைமை உறைந்து போயுள்ளது.
