மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி இன்றே உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், பார்த்த சாரதி, அவைத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனைக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக குழு பேச்சுவார்த்தைக் குழு சந்தித்து பேச உள்ளது.