
அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கும் நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவை எம்பி சீட் தங்களுக்கு கிடைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படி நாங்கள் சொல்லவே இல்லை என்றும் தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் கொடுக்க முடியாது என்றும் கூறினார். இது பற்றி பிரேமலதா விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில் X வலைதளத்தில் தற்போது சத்தியம் வெல்லும் நாளை நமதே DMDK for TN, DMDK for 2026 போன்ற ஹேஷ்டேக்குகள் ல் வைரலாகி வருகிறது.மேலும் இதன் காரணமாக அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேற போவதாக தகவல் பரவி வருகிறது.